தோல்விகளின் கதைகள்
அனைவரும் வெற்றிகளை எழுதிகொண்டிருக்க ஏன் இந்த தோல்வியின் கதைகளை பற்றி நான் எழுத விரும்பினேன் என தெரியவில்லை ஒரு வேலை எனக்கு சொல்லி கொல்ல வெற்றியின் கதைகள் இல்லாத காரணத்தால் தோல்வியின் கதைகளை தேர்ந்தெடுத்தேனா இல்லையே எனக்கு நிறைய வெற்றிகள் இருந்தனவே ஆனால் இப்போது தோல்விகள் மட்டும் தானே மிஞ்சியுள்ளன என்னை பற்றி நான் திரும்பி பார்க்க ஆசைபடுகிறேன் என்னுடைய பெரும் வெற்றியே என்னுடைய பெரும் தோல்வியாக அமைய போகிறது என எனக்கு தெரிந்து இருக்கவில்லை உன் தோல்வியை ஏற்றுக்கொண்டு அமைதியாகு என மனம் கூறினாலும் இல்லை வேறு எதாவது செய்து வெற்றி பெற்று விடுவேன் என தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் போராடும் பொழுதும் மீண்டும் மீண்டும் சமீப கால தோல்விகளை அனுபவித்து வரும் நான் சரி இறுதியாக நம் தோல்வி கதைகளை சொல்லிவிட்டாவது அமைதியாகலாம் என எழுத தொடங்கியதே தோல்வி கதைகள்
Comments
Post a Comment