நிம்மதி வேண்டும் என்றால் முதல் விதி இதுவே
அனைவரும் வேண்டுவது மகிழ்ச்சியை ஆனால் நிம்மதி என்ற அடித்தளம் மேலே தான் மகிழ்ச்சி என்ற வீட்டை கட்ட முடியும் நிம்மதி பெற முதலில் செய்ய வேண்டியது உங்கள் வார்த்தைகளை பணத்தினை போன்று செலவழிப்பதே அனைத்து நேரத்திலும் அனைத்து விசயங்களுக்கும் உங்கள் கருத்தை கூறவேண்டும் என்று இல்லை உஙகள் கருத்து அங்கு தேவை என்றாலோ அல்லது உங்கள் கருத்து அங்கு மதிக்கப்படும் என்றால் மட்டும் கருத்து சொன்னால் போதுமானது மற்றும் அனைத்து விசயங்களும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று இல்லை நமக்கு தெரியாத விசயங்களை பற்றி பேசும் பொழுது தெரியாது என்று கூற தயங்ககூடாது தயங்கினால் அவமானப்பட நேரிடும்.வார்த்தை சிக்கனம் வாழ்வின் நிம்மதி